அந்தர் பல்டி அடித்த திருமா!தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும்; விரைவில் விஜய் தலைமையில் கூட்டணி! தவெக அரசுக்கு நாங்க இருக்கோம்! - Seithipunal
Seithipunal


தவெக அரசு ஆறு மாதங்களில் கவிழும் என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், "இது மக்களின் ஆட்சி. இந்த அரசு முழு ஐந்தாண்டு காலத்தையும் நிறைவு செய்யும். ஆட்சி கவிழ்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு அரசியல் மற்றும் நிர்வாக விவகாரங்கள் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்தார்.

சபரிவர்மன் மரணம் தொடர்பாக பேசிய திருமாவளவன், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டிருந்தாலும், உண்மை முழுமையாக வெளிவர சிபிஐ விசாரணை அவசியம் எனக் கூறினார்.

"பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.

தவெக அரசு நீண்ட நாள் நீடிக்காது என்று திமுக தலைவர்கள் கூறி வருவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "இந்த அரசு மக்களின் ஆணையின் அடிப்படையில் அமைந்துள்ளது. எனவே, ஐந்தாண்டு காலத்தையும் நிறைவு செய்யும். ஆட்சி கவிழ்வதற்கான எந்த சூழலும் இல்லை" என்றார்.

மதுரை மற்றும் சேலத்தில் தனது போஸ்டர்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் குறித்து பேசிய அவர், இதுபோன்ற செயல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கில் சமூக விரோத சக்திகள் திட்டமிட்டு செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், தற்போதைய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கில் சில சாதிய மற்றும் மதவாத அமைப்புகள் செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்கும் விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், முந்தைய அரசைப் போலவே தற்போதைய அரசும் அதே நிலைப்பாட்டை கடைப்பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நவோதயா பள்ளிகள் மூலம் இந்தி திணிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் இருப்பதால், அவற்றை அனுமதிக்கக் கூடாது என்பது தனது நிலைப்பாடு என்றும் அவர் கூறினார்.

அரசியல் கூட்டணி குறித்து பேசிய திருமாவளவன், "நாங்கள் தமிழக வெற்றிக் கழக அரசில் பங்கு பெற்றுள்ளோம். கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. விரைவில் தவெக தலைமையில் ஒரு கூட்டணி அமையும். அதற்கான விவரங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக அனைத்து கட்சிகளின் கூட்டத்தை முதலமைச்சர் கூட்ட வேண்டும் என்றும், மேகதாது அணை தொடர்பாக தமிழகத்தின் நிலைப்பாட்டை வலுப்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், மாநில பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முதலமைச்சரே பல்கலைக்கழக வேந்தராக இருக்க வேண்டும் என்ற முந்தைய நிலைப்பாட்டை தற்போதைய அரசும் தொடர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், திமுகவுடன் நட்பு ரீதியான உறவு தொடர்வதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது தவெக தலைமையிலான ஆட்சியில் பங்கேற்றுள்ளதாகவும், விரைவில் கூட்டணி உருவாகும் என்றும் கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK inching closer to the BJP Will an alliance take shape Party cadres are crunching the numbers What is the word in political circles


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->