திமுகவில் கிளம்பிய எதிர்ப்பு! ஸ்டாலினின் விசுவாசி கைக்கு மாறும் பொதுச்செயலாளர் பதவி? - Seithipunal
Seithipunal


திமுகவின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சமீபத்தில் பிறந்த நாள் வந்தது. அதற்காக அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் அடித்து வாழ்த்து சொல்லினர். அந்த போஸ்டரில் விரைவில் புதிய பதவி ஏற்க இருக்கும் அண்ணன் நேருவுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என அடித்து இருந்தனர்.

கே.என்.நேருவுக்கு, புதிய பொறுப்பை ஸ்டாலின் தரப்போவதாகவும், அதற்கத்தான் இப்படி போஸ்டர் அடித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. தற்போது திமுகவில் பொதுச்செயலாளர் பதவி மட்டுமே காலியாகப்போகிறது. அந்தப்பதவியையும் சமீபத்தில் நடந்த திமுக பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலினே அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என தெரிவித்தனர். ஆனால் இதற்கு கட்சிக்குள் எதிர்ப்புகள் கொளம்பியதால், அந்தப்பதவியை தனது விசுவாசிக்கு கொடுக்க ஸ்டாலின்  நினைக்கிறாராம்.

பொதுச்செயலாளர் பதவிக்குத்தான் கே.என்.நேருவுக்கு அப்படி ஒரு போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர். விரைவில் பொதுச்செயலாளர் பதவி மாற வாய்ப்பு உள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk general secretary change


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->