தி.மு.க தேர்தல் சுற்றுப்பயணத்தில் களமிறங்கிய நடிகர்கள்.! முழு விவரம் இதோ...
DMK election campaign participated Actors
தி.மு.க தலைமை கழகம், தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர்கள் கருணாஸ், போஸ் வெங்கட், வாசு விக்ரம், நாஞ்சில் சம்பத் ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும், நாஞ்சில் சம்பத் வருகின்ற 3 ஆம் தேதி திருநெல்வேலி தொகுதியிலும், 4 ஆம் தேதி விருதுநகர், 5 ஆம் தேதி தென்காசி, 6 ஆம் தேதி தூத்துக்குடி, 7 ஆம் தேதி ராமநாதபுரம், 8 ஆம் தேதி மதுரை, 9 ஆம் தேதி சேலம், 10 ஆம் தேதி கள்ளக்குறிச்சி, 11ஆம் தேதி கடலூர், 12-ஆம் தேதி பொள்ளாச்சி, 13ஆம் தேதி திருப்பூர், 14 ஆம் தேதி கோவை, 15ஆம் தேதி நீலகிரி ஆகிய தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
இதனை அடுத்து நடிகர் கருணாஸ் வருகின்ற 2 ஆம் தேதி சிவகங்கை, 3 ஆம் தேதி மற்றும் 4 ஆம் தேதி ராமநாதபுரம், 5 ஆம் தேதி திருநெல்வேலி, 6 ஆம் தேதி தென்காசி, 7 ஆம் தேதி விருதுநகர், 11 மற்றும் 12ம் தேதி தேனி, 13ஆம் தேதி மதுரை, 14ஆம் தேதி திண்டுக்கல் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
நடிகர் போஸ் வெங்கட் வருகின்ற 1 ஆம் தேதி சேலம், 2 ஆம் தேதி நாமக்கல், 3ஆம் தேதி பெரம்பலூர், 4 ஆம் தேதி திருச்சி, 5 ஆம் தேதி கோவை.
நடிகர் வாசு விக்ரம் வருகின்ற 3 ஆம் தேதி திருவள்ளூர், 4 ஆம் தேதி அரக்கோணம், 5 ஆம் தேதி வேலூர், 6 ஆம் தேதி கிருஷ்ணகிரி, 7 ஆம் தேதி திருவண்ணாமலை, 8 ஆம் தேதி ஆரணி, 9 ஆம் தேதி காஞ்சிபுரம், 10ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர், 11 ஆம் தேதி தென் சென்னை, 12ஆம் தேதி மத்திய சென்னை போன்ற தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
English Summary
DMK election campaign participated Actors