சரியான நேரம் பார்த்து திமுக பிரமுகரை தூக்கிய ஓபிஎஸ்! அதிர்ச்சியில் திமுக!  - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கடமலை - மயிலை ஒன்றியத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்கான மறைமுக தேர்தல் இன்னும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கடமலை - மயிலை ஒன்றியத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, திமுக தலா 7 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி பெற்றதால், ஒன்றியக்குழுத் தலைவர்,  துணைத்தலைவரை தேர்வு செய்வதில் பிரச்சனை ஏற்பட்டது. 

இதனால் ஜனவரி 11 ஜனவரி 30 என இரண்டு முறை தலைவர், துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் திமுகவை சேர்ந்த 8-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தமிழ்செல்வன், துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து, அதிமுகவில் இணைந்தார். 

இதனையடுத்து கடமலை மயிலை ஒன்றியத்தில் அதிமுக பலம் 8 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து ஒன்றியக்குழுத் தலைவர்,  துணைத்தலைவரை அதிமுக கைப்பற்றும் என தெரிகிறது. கவுன்சிலரை கோட்டைவிட்டதால் பதவியை பெரும் வாய்ப்பை இழந்த திமுக அதிர்ச்சியடைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK counselor joined admk in front of OPS


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->