இத்தனை சீட் தானா? திமுக‌ முடிவுக்கு‌ கட்டுப்பாடுமா காங்கிரஸ்.!! இன்று மாலை பேச்சுவார்த்தை.!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலுக்கு திமுக தீவிரமாக தயாராகி வருகிறது. மண்டல பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுவிட்டனர். பூத் கமிட்டி மூலம் வாக்குசாவடி வாரியாக வாக்காளர்களை சந்திக்கும் பணியை திமுக தொடங்கவிட்டது.

அதேபோன்று தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார். நாடாளுமன்ற தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழு, தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் கே.என்.நேரு, இ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா எம்.பி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழு இன்று மாலை 3 மணிக்கு திமுக - காங்கிரஸ் இடையே முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை வழங்கப்பட்ட 10 தொகுதிகளுக்கு பதிலாக இம்முறை 8 தொகுதிகள் வழக்கு முடிவில் முடிவில் திமுக உள்ளதாக தெரியவருகிறது. அதாவது காங்கிரஸ் கட்சிக்கு ஒற்றை‌ இலக்கில் மட்டுமே சீட் வழங்க திமுக முடிவு‌செய்துள்ளது.

மேலும் விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கட்சிகளுக்கு தலா 1 இடங்கள் மட்டுமே கொடுக்க‌ திமுக திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு நடந்தால் 25-30 இடங்களில் திமுக போட்டியிட வாய்ப்புள்ளது. அதே‌போன்று காங்கிரஸ்க்கு 5-7 இடங்கள்தான் என்றும், வேட்பாளர் தேர்விலும் எங்கள் விருப்பங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் திமுக தலைமை காங்கிரஸ் கட்சியை நிர்பந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Congress seat sharing talk today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->