ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்..! 
                                    
                                    
                                   DMK candidate wins Erode East constituency by election by a margin of 90629 votes
 
                                 
                               
                                
                                      
                                            ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டது.
கடந்த 05 தேதி வாக்குப்பதில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மொத்தம் உள்ள 02 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்களில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 657 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.

இன்று காலை 08 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், மொத்தம் 17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் திமுக வேட்பாளர் சந்திரகுமார் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை பெற்று வந்தார்.
இறுதியாக மாலை 4.45 மணியளவில் கடைசி சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சந்திரகுமார் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 158 வாக்குள் பெற்று வெற்றி பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை விட 93,286 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சீதாலட்சுமி 23872 வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       DMK candidate wins Erode East constituency by election by a margin of 90629 votes