விஜயகாந்திற்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய நிர்வாகிகள்! காலியாகும் தேமுதிக கூடாரம்!! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் கொடுக்கப்பட்டது. போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தேமுதிக படுதோல்வியை சந்தித்தது. தேமுதிக 2 சதவிகித வாக்குகளை மட்டுமே பாராளுமன்ற தேர்தலில் பெற்று, மாநில கட்சி அந்தஸ்த்தையும் இழந்தது. 

இதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்பு போல் கட்சி பணியில் இல்லாததும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அதே போல் பிரேமலதா விஜயகாந்த் கட்சி நடத்தும் முறை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் கட்சியில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் மற்றும் மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். 

இந்நிலையில் தேமுதிக கட்சியை சேர்ந்தவர்கள் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.  அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நேற்று தேமுதிக கட்சியின் கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தேமுதிக ஒன்றிய, நகர, அணி நிர்வாகிகள்  உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். அப்போது கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜன், எம்.எல்.ஏ உடனிருந்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmdk members join dmk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->