தே.மு.தி.க யாருடன் கூட்டணி.? நாள் குறித்தார் பிரேமலதா.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்க உள்ளதால் அரசியல் கட்சியில் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. 

ஆனால் தேமுதிக இன்னும் தனது கூட்டணி மற்றும் வேட்பாளர் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. 

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவது குறித்து இரண்டு கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று முடிந்த நிலையில் முடிவு எட்டப்படவில்லை. 

தமிழகத்தில் திமுக மற்றும் பாஜக தங்களின் கூட்டணியை உறுதி செய்துள்ளன. நாளை திமுக மற்றும் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. அதேபோன்று அதிமுகவும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு மற்றும் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் நாளை மறுநாள் அறிவிக்கப்பட உள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMDK alliance dicision will be announce within 2days


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->