"இலவசம்" என்று அழைப்பதை நிறுத்த வேண்டும் - மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள்.! - Seithipunal
Seithipunal


எங்களுடைய சேவைகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று, டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்ததாவது, "அரசியலை சற்று தள்ளி வைத்துவிட்டு, எங்களுடைய சேவைகளை பயன்படுத்துங்கள். அனைத்து பள்ளிகளையும், நீங்கள், நாங்கள் மற்றும் 130 கோடி இந்தியர்களும் ஒன்றிணைந்து மேம்படுத்துவோம்.

இதனை அனைத்து மாநில அரசாங்கங்களும் ஒன்றிணைந்து செய்யும். இதனை 'இலவசம்' என்று அழைப்பது நிறுத்தப்பட வேண்டும். 

நல்ல தரமான  கல்வியை வழங்குவது என்பது 'இலவசம்' ஆகாது. நல்ல தரமுள்ள, இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் நாம் செய்ய வேண்டும். 5 ஆண்டுகளில் டெல்லியில் இதனை நாங்கள் செய்து இருக்கிறோம். 

நாங்கள் டெல்லியில் உள்ள 2.5 கோடி மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சைகளை கிடைக்க வழிவகை செய்துள்ளோம். டெல்லி அரசால் இது சாத்தியப்படும்போது, நாடு முழுவதும் கூட இதனை செயல்படுத்த முடியும்" என்று முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi CM say do not say free


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->