பாசிச எதிர்ப்புக்கெல்லாம் என்னைக் கூப்பிடாதீர்கள் என செவிட்டில் விசிலடித்து அனுப்பிவிட்டாரா?; காங்கிரஸிடம் கேள்வி எழுப்பிய தயாநிதி மாறன்..!
Dayanidhi Maran questioned the Congress asking if Vijay had told them not to invite him to anti fascist events
''காங்கிரஸ் உள்ளிட்ட துரோகிகள் கழண்டுகொண்ட பின்பும், இடைத்தேர்தலில் திமுகவின் வாக்கு சதவீதம் அப்படியே இருப்பதைப் பார்த்து, நீங்கள் வாக்குவங்கி இல்லாத டம்மி பீஸ்கள்தான் எனும் 'கம்பெனி சீக்ரட்' டம்மி முதல்வருக்கே தெரிந்துவிட்டதோ'' என தவெக - காங்கிரஸ் கூட்டணியை திமுக எம்.பி தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.
எஸ்ஐஆர் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் 11 தலைவர்கள் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதில் தமிழக முதல்வர் விஜய்யின் பெயர் இடம்பெறாதது குறித்து திமுக எம்.பி தயாநிதி மாறன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
,
''பாசிசம், பாயாசம் எனப் பஞ்ச் பேசும் நடிகர் பெயர் இதிலும் காணவில்லையே? என்ன ஆச்சு?
சாதாரணமாக பேசும்போது ஒன்று சொல்லுவார்கள், வா, போ, பேசு, அப்படியே வந்தாலும் ஒரு காபி தருகிறேன் சாப்பிட்டுவிட்டு போ, அதற்கு மேலே எதையும் கேட்காதே என்பார்கள்.. அப்படிதான் இதையும் பார்க்க வேண்டும் போல.
பழக்க வழக்கமெல்லாம் பனையூருக்கு வந்து காபி சாப்பிடுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். பாசிச எதிர்ப்புக்கெல்லாம் என்னைக் கூப்பிடாதீர்கள் என செவிட்டில் விசிலடித்து அனுப்பிவிட்டாரா?
காங்கிரஸ் உள்ளிட்ட துரோகிகள் கழண்டுகொண்ட பின்பும், இடைத்தேர்தலில் திமுகவின் வாக்கு சதவீதம் அப்படியே இருப்பதைப் பார்த்து, நீங்கள் வாக்குவங்கி இல்லாத டம்மி பீஸ்கள்தான் எனும் 'கம்பெனி சீக்ரட்' டம்மி முதல்வருக்கே தெரிந்துவிட்டதோ''எனத் தவெக - காங்கிரஸ் கூட்டணியை தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.
English Summary
Dayanidhi Maran questioned the Congress asking if Vijay had told them not to invite him to anti fascist events