#BigBreaking | நாள் குறித்த உச்சநீதிமன்றம் - இபிஎஸ் தரப்பில் அதிகாரபூர்வ பேட்டி! - Seithipunal
Seithipunal


பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை என்றும், தசரா பண்டிகை முடிந்தபின் வழக்கு விசாரணைக்கு வர உள்ளதாகவும் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் பொதுக்குழு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஓபிஎஸ் தரப்பில், "கட்சிக்கு தேவையான அனைத்தையும் செய்ய தான் தயாராக இருந்தேன். ஆனால் என்னை வேண்டாம் என்று வெளியே தள்ளி முடிவெடுத்து விட்டனர்" என்று ஓபிஎஸ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், அதிமுகவின் பொதுக்குழு சம்பந்தமான மேலும் சில வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றிணைத்து வருகின்ற தசரா பண்டிகை முடிந்த பிறகு விசாரித்து கொள்ளலாம். அப்போது இரு தரப்பினரும் தங்களது இறுதி வாதங்களை முன்வைக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதற்க்கு ஓபிஎஸ் தரப்பு, "எதிர் மனுதாரர் தரப்பில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்கு தடை விதிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில், வழக்கின் முடிவு வெளியாகும் வரை பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறாது என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து ஓபிஎஸ் மேல்முறையீடு குறித்து விரிவான பதில் அளிக்க கோரி எடப்பாடி பழனிசாமிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிவி சண்முகம் எம்பி தெரிவிக்கையில், "பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு உண்டான எந்த தடையும் உச்ச நீதிமன்றம் இந்த நொடி வரை எந்த உத்தரத்தையும் பிறப்பிக்கவில்லை.

நாங்களாகவே முன்வந்து பொதுசெயலாளர் தேர்தல் நடத்தப்படாது என்று உறுதியளித்துள்ளோம். உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த முட்டாளாக தான் இருக்க வேண்டும். அதனை நாங்கள் செய்ய மாட்டோம். சாதாரண ஒரு வழக்கறிஞர் கூட அந்த செயலை செய்ய மாட்டார்கள்.

அந்த வகையில் நாங்களே முன்வந்து இதனை தெரிவித்து இருக்கிறோம். பொதுச் செயலாளர் தேர்தல் நடத்துவதற்கு உண்டான எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. இந்த வழக்கு சமந்தமாகவுள்ள மேலும் ஒரு வழக்கையும் ஒன்றாக இணைத்து தசரா பண்டிகை முடிந்து 21ஆம் தேதி இந்த வழக்கின் இறுதி விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அப்போது எங்களது வாதங்களை முன் வைப்போம்" என்று சிவி சண்முகம் தெரிவித்தார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CV Shanmugam say abouy SC order for admk case issue sep


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->