ராஜினாமா செய்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுடன்., சி.வி.சண்முகம் திடிர் சந்திப்பு!! - Seithipunal
Seithipunal


சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்தவர் தஹில்ரமணி, அவர் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தஹில் ரமணியை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்ய அவர் விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு நிராகரித்ததையடுத்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி தலைமையிலான முதல் அமர்விற்கு இன்று 75 வழக்குகள் பட்டியல் உள்ளது. ஆனால் அவர் இன்று பணிக்கு வரவில்லை, தலைமை நீதிபதி தஹில் ரமாணி பணிக்கு வராத காரணத்தினால் அவரால் விசாரிக்கப்படவேண்டிய 75 வழக்குகளும் 
நீதிபதி அக்னிஹோத்ரி அமர்வு விசாரிக்கிறது.

மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டதால் தான் தஹில் ரமாணி அதிருப்தி என தெரிகிறது, இதனை தொடர்ந்து அவர் இன்று பணிக்கு வராததால் தலைமை நீதிபதி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து பேசி வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cv shanmugam meets with tahilramani


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->