''தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டுக்கு திமுக செல்லாது''; சிபிஎம் சண்முகம்..!
CPM Shanmugam says DMK will not accept a stand in support of the constituency redelineation bill
தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் பாஜகவுக்கு திமுக ஆதரவாந நிலைப்பாட்டுக்கு செல்லும் என்று தான் நினைக்கவில்லை என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தவெக தலைமையிலான கூட்டணியில் இடம் பெறப் போவதில்லை எனவும், திட்டவட்டமாகத் அறிவித்துள்ளார். பிரபல செய்திசேவைக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விசிக அமைச்சரவையில் இருப்பதால் தவெக கூட்டணிக்குச் செல்லலாம் என்று குறிப்பிட்டுள்ளதோடு, பாஜகவை கடுமையாக எதிர்க்கும் திமுக, தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டுக்கு சென்றுவிடும் என்று தான் நினைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
அத்துடன், இந்த தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக, தேவைப்பட்டால் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசுவதில் தயக்கமில்லை எனவும் சண்முகம் தெரிவித்துள்ளார்.
English Summary
CPM Shanmugam says DMK will not accept a stand in support of the constituency redelineation bill