கொரோனா வைரஸ் பரிசோதனை முதலமைச்சரை விட அதிக வெப்பநிலையில் ஓ. பன்னீர்செல்வம்.! - Seithipunal
Seithipunal


உலகையே பெரும் அச்சறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவின் டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலத்தில் பரவியுள்ள கொரோனாவிற்கு 5 பேர் பலியாகியுள்ளனர். 223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சல் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் மருத்துவமனையில் அனுமதியகுமாறு அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

தமிழகத்தில் இதுவரை 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கடந்த பிப்ரவரி மாதம் முதல் மார்ச் 20ஆம் தேதி இன்று வரை 3 ஆயிரத்து 481 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. 

இந்நிலையில் இன்று காலை தலைமை செயலகத்தில் பத்தாம் எண் வாயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோருக்கு சுகாதாரத் துறையினர் கொரோனா பரிசோதனை செய்தனர். 

அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின்  உடல் வெப்பநிலை 93.1 பாரன்ஹீட், துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் உடல் வெப்ப நிலை 98.6 பாரன்ஹீட் என காட்டியது. இதைத்தொடர்ந்து சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்து கொண்டு சட்டசபைக்கு சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

corona checking in eps and ops


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->