குடியரசு தலைவரை அவமதித்த காங்கிரஸ் எம்.பி.,! சோனியா காந்தியை மன்னிப்பு கேட்க கோரும் பாஜக.! - Seithipunal
Seithipunal


நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறையினர் சோனியா காந்தியிடம் விசாரணை மேற்கொண்டதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டபோது, நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள திரவுபதி முர்முவை, ராஷ்டிரபத்னி என்று பாராளுமன்ற உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டார்.

இதற்கு பா.ஜ.க தலைவர்கள்  கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் வாய் தவறி அந்த வார்த்தை வந்துவிட்டதாகவும், தான் ஒருபோதும் இந்திய ஜனாதிபதியை அவமரியாதை செய்ய விரும்பவில்லை என்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து இன்று பாராளுமன்றத்தில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் கருத்துக்காக காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அதே சமயத்தில் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்கவும், பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை திரும்ப பெற வலியுறுதியும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். 

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் அமளியினால் இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதன் பின்னர் மதியம் 12 மணிக்கு அவை தொடங்கப்பட்டது. அப்போதும் எதிர்க்கட்சியினரின் அமளி நீடித்ததால் மதியம் 2 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress MP insult President issue BJP demands an apology from Sonia Gandhi


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->