தமிழக காங்கிரசுக்கு பெண் தலைவரா? கே.எஸ் அழகிரியின் பதவிக்கு ஆப்பு!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் வந்துள்ள நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுடன் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தல், உட்கட்சி விவகாரங்கள், தமிழக அரசியல் நிலவரங்கள் என பல்வேறு விவகாரங்கள் குறித்து சோனியா காந்தி விரிவான ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி காங்கிரஸ் நிர்வாகிகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் உட்கட்சி பூசல் டெல்லி தலைமைக்கு தலைவலியாக அமைந்துள்ளதால் இன்னும் ஆறேழு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. 

அதேபோன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரிக்கு அனைத்து நிர்வாகிகளும் கட்டுப்பட வேண்டும் எனவும், அனைத்து பிரிவு நிர்வாகிகளும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட்டால் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற முடியும் எனவும், காங்கிரஸ் கட்சி எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு கட்சி நிர்வாகிகள் செயல்பட வேண்டும் எனவும், எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் திமுக தலைமை நான் கூட்டணியில் தமிழகத்தில் போட்டியிடும் தொகுதிகள் குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தியுள்ளார். 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் நிர்வாகிகள் தமிழகத்திற்கு காங்கிரஸ் கட்சியை மேலிட பொறுப்பாளர் உடனடியாக நியமிக்க வேண்டும் எனவும், அதே போன்று தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு இளம் தலைவரை நியமிக்க வேண்டும் எனவும் கார்த்திக் சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பெண் நிர்வாகிகள் பெண் தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி வைத்துள்ளனர். 

மேலும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக கடந்த ஐந்து ஆண்டுகளாக கே.எஸ் அழகிரி இருந்து வரும் நிலையில் புதிய தலைவரின் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது எனவும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் கூடிய விரைவில் தமிழக காங்கிரஸ் கமிட்டியில் மிகப்பெரிய மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress leader request Sonia Gandhi to change TN Congress president


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->