ஆட்சிக்கு வந்தால் நாங்கள் என்ன செய்ய வேண்டும்? மக்கள் கருத்தைக் கேட்கும் காங்கிரஸ்.!! - Seithipunal
Seithipunal


பாஜக அரசை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ய ஜனதா தளம், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 28 எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இரண்டாம் கட்ட பாரத ஒற்றுமை நியாய யாத்திரையை தொடங்கியுள்ளார்.

மற்றொருபுறம் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதிகள் குறித்து மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க இணையதளம் மற்றும் மின்னஞ்சலை அறிமுகப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் https://awaazbhratki.in என்ற இணையதளம் வாயிலாகவும் அல்லது awaazbharatki@inc.in என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress introduced website email for lok sabha manifesto


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->