பாஜகவுடன் காங்கிரசுக்கு எந்த பகையும் இல்லை.. ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்.! - Seithipunal
Seithipunal


வன்முறையில் ஈடுபடுபவர்கள் எந்த சாதி இந்து மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள சங்கனேரியில் நடந்த விழாவில் உரையாற்றிய அம்மாநில முதல் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் உடன் காங்கிரஸ் கட்சிக்கு எந்த பகையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் தம்மை சந்தித்ததாகவும் அப்போது எங்களுக்கு யாருடனும் பகையில்லை என்பதை தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

இதை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் பிரதமர் மோடியிடம் தெரிவிக்க சொன்னதாகவும் அனைவரையும் நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம் என்பது நாட்டு மக்களுக்கு தெரிய வேண்டும் என்றும் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ஆனால் வன்முறை எந்த வடிவத்தில் இருந்தாலும் பொறுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறிய அவர் வன்முறையை யாரும் ஏற்கக்கூடாது என்றும், ஆட்சியில் இருப்பவர்கள் எந்த கட்சி சாதி அல்லது மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அதை கண்டிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress has no enmity with BJP, RSS Rajasthan Chief Minister Ashok Gelad


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->