5 மாநில தேர்தல் தோல்வி.. காங்கிரஸ் தலைமை எடுத்த அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. 5 மாநில தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ள நிலையில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது.

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் தலைமையை குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல் செப்டம்பரில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இது முன்கூட்டியே நடக்க வாய்ப்பு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

உத்தர பிரதேசம் உத்தரகாண்ட் மணிப்பூர் கோவா உள்ளிட்ட 4 மாநிலங்களில் அபார வெற்றி பெற்ற பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இதில் உத்தரகண்ட் மாநிலம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.

இதில், காங்கிரஸ் போட்டியிட்ட ஐந்து மாநிலங்களிலும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனையடுத்து  காங்கிரஸ் கட்சி சார்பில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழு கூட்டம் நாளை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress Executive Committee meeting tomorrow


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->