திமுக.,வுக்கு பல்பு.! கே.எஸ்.அழகிரி எடுத்த அதிரடி முடிவு! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி எங்கள் தூக்கித்தி என்றும், அதில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடும் என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று விளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், "இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 லட்சத்தைத் தாண்டியுள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரமாக உயர்ந்துள்ளது. உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில், கடுமையான பாதிப்பை இந்தியா சந்தித்து வருகிறது. 

இதையெல்லாம் மூடி மறைக்கின்ற வகையில், கரோனா உயிரிழப்புகளை குறைத்ததன் மூலம், இந்தியா சிறப்பாக செயல்பட்டிருப்பதாகவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக மக்கள் வாக்களித்து ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப் போகிறார்கள். அதேபோல, 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பாஜக ஆட்சி அகற்றப்படுவதற்கு முன்னோட்டமாக பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆதரவு பெற்ற நிதிஷ்குமார் ஆட்சி அகற்றப்படுவது உறுதியாக்கப்பட்டு வருகிறது.

நரேந்திரமோடிக்கு எதிராக அரசியல் காற்று வீச ஆரம்பித்துவிட்டது. மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையில் ஈடுபட்டுள்ள கட்சிகளுக்கு நம்பிக்கையூட்டுகின்ற வகையில் பிகார் தேர்தல் முடிவுகள் வெளிவரப் போகின்றன. மேலும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி எங்கள் தொகுதி, இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடும்." என்று அந்த அறிக்கையில் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress contest again kanniyakumari


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->