மகளிர் இட ஒதுக்கீடு இருக்கட்டும்; மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போ? பாஜக அரசுக்கு காங்கிரஸ் கேள்வி! - Seithipunal
Seithipunal


இந்தியாவே எதிர்பார்த்த மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா புதிய நாடாளுமன்றத்தில் பெரும் அமளிக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றம், சட்டமன்றம், தலைநகரங்கள் தேர்தலில் மூன்றில் ஒரு பங்கு மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. மேலும் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டிலும் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. 

இந்த மசோதாவை புதிய நாடாளுமன்றத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் இன்று தாக்கல் செய்தார். இந்த மகளிர் இட ஒதுக்கீடு என்பது நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட பிறகு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதி மறு வரையறை பணிவானது வரும் 2026ம் ஆண்டு தொடங்கி 3 முதல் 4 ஆண்டுகள் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குறைந்தபட்சம் 2029 வரை இந்த இட ஒதுக்கீடானது நடைமுறைப்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. மேடம் தொகுதி வரையறைக்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்பட்டாலும்15 ஆண்டுகளுக்கு மட்டுமே இந்த இட ஒதுக்கீடு நடைமுறையில் இருக்கும் என அந்த சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் இந்த மசோதா தாக்கல் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். குறிப்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பையே மத்திய அரசு இன்னும் நடத்தவில்லை. இதனிடைய மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவடைந்த பிறகு இந்த சட்ட மசோதா நடைமுறைப்படுத்தப்படும் என கூறுவது மக்களுக்கு செய்யும் துரோகம்.

ஜி20 கூட்டமைப்பு நாடுகள் அனைத்தும் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்துள்ள நிலையில் இந்தியா மட்டுமே இன்னும் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தவில்லை. நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு முன்பாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுமா? மகளிர் இட ஒதுக்கீடு மசோதா எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்ற தெளிவு இல்லாமல் தலைப்பு செய்திகளில் இந்த விவகாரம் இடம் பெற்றுள்ளது" என குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress asks BJP govt when census will be conducted


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->