மதிமுக-விசிக மோதல்.. இடையில் நசுக்கப்பட்ட காங்கிரஸ்..திமுக கூட்டணியில் குழப்பம்..!! - Seithipunal
Seithipunal


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலை சந்திக்க மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வலுவாக உள்ளது என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால் தற்பொழுது திமுக கூட்டணியில் சலசலப்பு உருவாகியுள்ளது. பாஜக, பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இடம்பெறாது என திருமாவளவன் பகிரங்கமாக பேசி வருகிறார்.

அதே வேளையில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு தீர்ப்பு வெளியானத போது திருமாவளவன் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த வாழ்த்து செய்தியில் பாஜகவையும் விமர்சனம் செய்திருந்தார். 

இதற்கிடையே இலங்கை தமிழர் பிரச்சனையை மையப்படுத்தி தமிழக கட்சிகள் அரசியல் செய்ததாக திருமாவளவன் குற்றம் சாட்டியிருந்தார். குறிப்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பற்றி பேசி இருந்தது அக்கட்சியினரை அதிருப்தியில் ஆழ்த்தியது.

இது குறித்து மதிமுக துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் "இலங்கைத் தமிழர் பிரச்சினையில் வைகோ அரசியல் குறித்து திருமாவளவன் குறிப்பிடுவது வேதனை தருகிறது. கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது" என குறிப்பிட்டு இருந்தார். இதன் மூலம் திமுக கூட்டணி கட்சிகள் இடையே இருந்த மோதல் போக்கு வெளிச்சத்துக்கு வந்தது.

இதற்கிடையில் மதிமுக முன்னாள் கொள்கை பரப்புச் செயலாளர் அழகு சுந்தரம் தனது அறிக்கையில் "பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை சுட்டுக்கொன்ற செய்தி என் காதில் தேனாக இனித்ததாக இளங்கோவன் கூறினார். அதே இளங்கோவனுக்காக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வைகோவும் அவரது மகன் துரையும் பிரச்சாரம் செய்தது எந்த வகையில் நியாயம்" என கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது கருத்து காங்கிரஸ் நிர்வாகி மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே கூட்டணியில் இருந்து கொண்டு இளங்கோவனை எப்படி விமர்சிக்கலாம் என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் திமுக கூட்டணி கட்சிகள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் போக்கு எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தல் கூட்டணியில் எதிரொலிக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஈழப் போரை மையப்படுத்தி திமுக கூட்டணி கட்சிகள் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் எவ்வாறு சமாதானம் செய்யப் போகிறார் என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Confusion in DMK alliance parties clash between MDMK VCK Congress


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->