திமுகவில் இருந்து விலகும் கூட்டணி கட்சி?! செய்தியாளர்களிடம் பரபரப்பு பேட்டி.!  - Seithipunal
Seithipunal


செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன், "திமுக தலைமையிலான எங்களது கூட்டணி தொடரும் என்றும், எங்கள் கூட்டணி பலமாக உள்ளது என்று கூறியுள்ளார். 

மேலும், இந்தியாவில் இருக்கும் 70 சதவீத விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. தனியார் மற்றும் கார்ப்பரேட் முதலாளிகள் லாபம் அடைய செய்யும் நோக்கில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

3 சட்டங்கள் குறித்து பிரதமர் பொய்யுரைத்து வருகின்றார். மத்திய அரசுக்கான சட்டங்களை கொண்டு வந்தாலும் அனைத்தையும் தமிழக அரசு கண்மூடித்தனமாக ஏற்று வருகிறது. மத்திய அரசின் விவசாயிகளுக்கு எதிரான இந்த சட்டத்தை ஆதரிக்கும் ஒரே விவசாயி நம்முடைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மட்டும்தான். 

வேளாண் சட்டத்தால் குறைந்தபட்ச ஆதரவு விலை வியாபாரிகளுக்கு கிடைக்காது. விவசாயிகள் அறுவடை முடிந்தவுடன் பணமாகவே எதிர் பார்ப்பார்கள். பெரும் வியாபாரிகள் மட்டுமே கள்ள மார்க்கெட்டில் வைத்து விற்பனை செய்ய முடியும். 

தமிழக முதல்வர் உண்மையான விவசாயியாக இருந்தால், அதிமுகவின் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு எதிராக வாக்களிக்க வேண்டும். எதிராக வாக்களிக்காத காரணத்தால் விவசாயிகளின் முதுகில் குத்திய துரோகிகளாக மாறிவிட்டனர்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

communist mutharasan speech about dmk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->