"செங்கல்பட்டு - திருச்சி இடையே 6 வழிச்சாலை அவசியம்!": பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் சி. ஜோசப் விஜய் கோரிக்கை! - Seithipunal
Seithipunal


சென்னையில் இன்று (அக்டோபர் 11, 2026) நடைபெற்று வரும் ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு உள்கட்டமைப்புத் திட்டங்களின் தொடக்க விழாவில், ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்துகொண்ட மேடையில், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் மாநிலத்தின் முக்கிய சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்துப் பேசினார்.

முதல்வர் விஜய் முன்வைத்த முக்கியக் கோரிக்கைகள்:
தென் மாவட்டங்களைச் சென்னையுடன் இணைக்கும் அதிமுக்கிய நெடுஞ்சாலையான செங்கல்பட்டு - திருச்சி இடையேயான பாதையை 6 வழிச்சாலையாக விரிவுபடுத்தும் திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து மத்திய அரசு உடனே செய்து கொடுக்க வேண்டும் எனப் பிரதமரிடம் கேட்டுக்கொண்டார்.

திருச்சி பஞ்சப்பூர் - கரூர், கரூர் - கோவை ஆகிய வழித்தடங்களை 6 வழிச்சாலையாக தரம் உயர்த்துதல்.

மாதவரம் - சோழவரம் இடையே புதிய உயர்மட்டச் சாலை (Elevated Expressway) திட்டத்தை விரைந்து செயல்படுத்த நிதியுதவி மற்றும் அனுமதிகளை வழங்க கோரிக்கை.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு இச்சாலைத் திட்டங்கள் மிகவும் அவசியமானவை என்று முதல்வர் சுட்டிக்காட்டினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cm vijay request to pm modi for trichy to chengalpattu 6 way lane road


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->