நாட்டை சீர்குலைக்க முயலும் சதிகளுக்கு எதிராக தேசபக்தர்கள் ஒன்றுபட வேண்டும்: சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை!
Sridhar Vembu Calls for Unity Among Patriots Against Destabilization Conspiracies
இந்தியாவில் வாக்காளர் பட்டியல் விவகாரமான 'SIR' நடவடிக்கையில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி 'CJP' அமைப்பு டெல்லியில் போராட்டம் நடத்த முயன்றது. இந்தத் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற மேற்கு வங்கம், கேரளா, டெல்லி முன்னாள் முதல்வர்கள் மற்றும் சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே உள்ளிட்ட பல தலைவர்கள் மற்றும் இளைஞர்களை டெல்லி காவல்துறை கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தேசிய அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், சோஹோ நிறுவனத்தின் (Zoho) இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் இதுகுறித்த கடுமையான கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதில், வெளிநாட்டு ஆதரவு மற்றும் நிதியுதவியுடன் நமது நாட்டைச் சீர்குலைக்கத் திட்டமிடப்படும் சதிகளுக்கு எதிராக நாட்டின் தேசபக்தர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், தற்காலத்தில் தொழில்நுட்பங்கள் நமது நாட்டிற்கு எதிராகவே ஒரு போராயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்த நவீன சவால்களை எதிர்கொள்ள நாம் உடனடியாகப் புதிய தொழில்நுட்பங்களையும் வலிமையான பொறியியல் தீர்வுகளையும் உருவாக்க வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் சுட்டிக் காட்டியுள்ளார். தலைவர்களின் கைது நடவடிக்கையும், அதற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குரல்களும் எழுந்துள்ள சூழலில், ஸ்ரீதர் வேம்புவின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்திலும் தொழில்நுட்பத் துறையிலும் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.
English Summary
Sridhar Vembu Calls for Unity Among Patriots Against Destabilization Conspiracies