ஆளுநர் மீது தூசு கூட விழாதவாறு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது - முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்.! - Seithipunal
Seithipunal


ஆளுநரின் வாகனம் தாக்கப்பட்ட நிகழ்வு தொடர்பாக சட்டமன்றத்தில் எடப்பாடி கே பழனிச்சாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

இந்தகவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய எடப்பாடி கே பழனிச்சாமி, "ஆளுநரின் பாதுகாப்பில் காவல்துறை தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுக்கவில்லை? இது தமிழ்நாட்டு காவல்துறை மீது விழுந்த கரும்புள்ளி. கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு காவல்துறையே பாதுகாப்பு கொடுத்து இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. காவல்துறையின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது" என்று எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்தார்.

பின்னர், ஆளுநரின் வாகனத்தை நோக்கி கருப்புக்கொடி வீசப்பட்டதை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தனர்.

இதனையடுத்து பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், "அரசின் விளக்கத்தை கேட்ட பின், அதில் உடன்பாடு இல்லையென்றால் தான் வெளிநடப்பு செய்ய வேண்டும்; அதுவே மரபு. ஆளுநர் விவகாரத்தில் விடியா அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? என்று கேட்ட எடப்பாடி பழனிசாமி, எனது பதிலைக் கேட்காமலேயே வெளியில் சென்றுள்ளார்

வழக்கம் போல் சேர்ந்தே அறிக்கை விடும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆளுநர் விவகாரத்தில் தனித்தனியாக அறிக்கை விட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஆளுநரின் வாகனம் மீது கற்கள், கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. நமக்கு இதுதான் வாய்ப்பு என இதை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அரசியல் கட்சிகளின் இயல்பு தான்; நடக்காத ஒன்றை நடந்ததாகக் கூறி அரசியல் செய்ய வேண்டாம்.

ஆளுநர் மீது தூசு கூட விழாதவாறு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் பாதுகாப்பில் அரசு எந்த சமரசமும் செய்துகொள்ளாது; இதில் அரசியல் செய்யலாம் என்று எதிர்க்கட்சிகள் நினைத்தால் அது நடக்காது" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cm stalin say about Governor Security issue


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->