உமர் அப்துல்லாவுக்கு நடந்தது, மக்கள் பிரதிநிதிகள் யாருக்கும் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..!
Chief Minister MK Stalin condemns the police stopped the Jammu and Kashmir Chief Minister
நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்த வந்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவை, போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர் சுவர் ஏறி குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தடுத்து நிறுத்தப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
உமர் அப்துல்லாவுக்கு நடந்தது, மக்கள் பிரதிநிதிகள் யாருக்கும் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். ஜனநாயகத்தில் நம்பிக்கை உடைய அனைவரும் ஒருமித்த குரலில் இதனை கண்டிக்க வேண்டும். காஷ்மீர்-தமிழ்நாடு வரை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமையை பாஜக அரசு திட்டமிட்டே பறிக்கிறது.
மாநில அந்தஸ்து கோரும் நிலையில், அங்கு நிலைமை எவ்வளவு மோசம் என்பதை விளக்குகிறது. சுவர் ஏறிகுதித்து உமர் அப்துல்லா சென்றார்; தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை இப்படியா நடத்துவது?. தியாகிகளுக்கு மரியாதை செலுத்த கூடாது என்பதற்காகவே வீட்டு காவலில் ஒரு முதல்வர் வைக்கப்பட்டுள்ளார்.
உமர் அப்துல்லா தடுத்து நிறுத்தப்பட்டது, ஜம்மு-காஷ்மீரில் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Chief Minister MK Stalin condemns the police stopped the Jammu and Kashmir Chief Minister