மீண்டும் அவதூறு கருத்து.. பரபரப்பை கிளப்பிய எஸ்.ஜி சூர்யா.. களமிறங்கிய கடலூர் போலீஸ்.!! - Seithipunal
Seithipunal


மதுரை தொகுதி எம்பி வெங்கடேசன் குறித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும் தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அவதூறு கருத்துகளோடு அறிக்கை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை மாநகர காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் சென்னையில் வைத்து எஸ்.ஜி சூர்யாவை கைது செய்த மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யாவுக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.

அந்த ஜாமீன் உத்தரவில் 30 நாள்களுக்கு தினமும் காலை 10 மணிக்கு மதுரை சைபர் கிரைம் போலீஸ் முன்னிலையில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் சற்று ஓய்ந்த நிலையில் தற்பொழுது பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூரியா மீண்டும் சர்ச்சைக்குரிய அவதூறு கருத்தை பதிவிட்டு சிக்கலில் மாட்டியுள்ளார். கடந்த வாரம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருமஞ்சனம் விழாவை முன்னிட்டு கனக சபையின் மீது பொதுமக்கள் ஏறி தரிசனம் செய்ய தீக்ஷதர்களால் தடை விதிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கும் சிதம்பரம் நடராஜர் கோயில் தீக்ஷதர்களுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் பாதுகாப்புடன் தீக்ஷிதர்களின் எதிர்ப்பையும் மீறி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கனகசபையின் மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர்.

இதை சம்பவம் தொடர்பாக பாஜக மாநில செயலாலர் எஸ்.ஜி.சூர்யா சிதம்பரம் கோயிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீக்ஷதர்களை தாக்கி பூணூலை அறுத்ததாக போலி செய்தி பரப்பியதாக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா மற்றும் சென்னையைச் சேர்ந்த கவுசிக் சுப்பிரமணியன் ஆகியோர் மீது சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள சிதம்பரம் போலீசாரச சமூக அமைதியை குலைக்கும் வகையில் செயல்பட்டதாக சென்னையை சேர்ந்த கவுசிக் சுப்ரமணியன் மற்றும் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா ஆகியோருக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியுள்ளனர். இதனால் எஸ்.ஜி சூர்யாவிற்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chidambaram police sent summons for defaming complain on SGSurya


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->