முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை! எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா தொற்று உறுதியானது!  - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் குளிர்கால கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் செப்டம்பர் 14,15,16 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் எதிர்கட்சி தலைவர், எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.  இந்த கூட்டத் தொடரை பொறுத்தவரை ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கக்கூடிய குளிர்கால கூட்டத்தொடர் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ-க்களி ன் வீடுகளுக்கு நேரில் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால் இந்த கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரையொட்டி நடத்தப்பட்ட கொரோனா  பரிசோதனை முடிவுகள் வெளியானது. பரிசோதனை முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோருக்கும் கொரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்தது.

இந்த நிலையில் செய்யாறு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ தூசி மோகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cheyyar aiadmk mla corona positive confirmed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->