அதிமுக முன்னாள் அமைச்சர் வழக்கில்., நாள் குறித்த சென்னை உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது, உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தல்லாகுளத்தில் சேர்ந்த மகேந்திரன் என்பவர் மனு அளித்திருந்தார்.

அவரின் அந்த மனுவில், "ஒரு கோடிக்கும் அதிகமான சொத்துக்களை ராஜேந்திர பாலாஜி,  ராஜபாளையம், திருத்தங்கல் பகுதிகளில் வாங்கி உள்ளார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளித்தும், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர், கடந்த மார்ச் மாதம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். நீதிபதி சத்தியநாராயணன் வழங்கிய தீர்ப்பில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

நீதிபதி ஹேமலதா அளித்த தீர்ப்பில், நீண்ட இடைவெளிக்குப் பின் இதற்கு வழக்கு பதிந்து மேற்கொண்டு விசாரித்ததால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை, என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்திருந்தார். 

நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு காரணமாக இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி எம் நிர்மல்குமார் விசாரிக்க, தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதனடிப்படையில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி நிர்மல்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் வழக்கு தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. இந்த வழக்கின் இறுதி விசாரணை வருகின்ற ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி நடைபெறும் என்றும், அப்போது இரண்டு தரப்பு வழக்கறிஞர்களும் ஆஜராகி இந்த வழக்கு குறித்து வாதிட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai hc order to rajendra balaji case july


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->