திடீர் ட்விஸ்ட்.. ஜன.22ம் தேதியை குறித்த நீதிபதி.. கலக்கத்தில் செந்தில் பாலாஜி தரப்பு.!! - Seithipunal
Seithipunal


அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தத நிலையில் புழல் சிறையில் இருந்தபடி  காணொலி காட்சி வாயிலாக சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். இதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் ஜனவரி 22ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இந்நிலையில் செந்தில்பாலாஜி சார்பில் சென்னை முதன்மை நீதி மன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் "தனக்கு எதிராக அமலாக்கத் துறை சமர்ப்பித்துள்ள ஆவணங்களை, தனக்கு வழங்க வேண்டும். இந்த ஆவணங்களில் அமலாக்கத் துறை திருத்தங்களைச் செய்துள்ளது. தன்னை கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு அமலாக்கத் துறை ஆவணங்களைத் தயாரித்து உள்ளது. தனக்கு ஆவணங்களை வழங்காமல் முழுமையாக விசாரணையைத் தொடர்வது முறையற்றது" குறிப்பிட்டிருந்தார்.

செந்தில் பாலாஜியின் புதிய மனுவை ஏற்றுக்கொண்ட  நீதிபதி அல்லி இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை வரும் ஜனவரி 22ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டதோடு, இந்த வழக்கின் குற்றச்சாட்டுகள் ஜனவரி 22ம் தேதி பதிவு செய்யப்படும் என நீதிபதி அல்லி பிறப்பித்த உத்தரவிட்டுள்ளார்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Charges filed against Senthil Balaji on Jan22


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->