பாயிண்ட் பிடித்த செந்தில் பாலாஜி.. குற்றச்சாட்டு பதிவு இன்று இல்லையாமே.. ED-க்கு அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

தனக்கு ஜாமீன் வழங்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் விசாரணை நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை நாடிய நிலையில் 3வது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி அல்லி  உத்தரவிட்டார்.

மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 15வது முறையாக நீட்டிக்கப்பட்டதோடு இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என அறிவித்திருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு பணம் பெற்று மோசடி செய்ததாக தாக்கலான வழக்கு நிலுவையில் உள்ளதால் அமலாக்கத்துறை வழக்கில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்படாது என அறிவித்ததோடு அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணை வரும் ஜனவரி 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Charge against Senthil Balaji is not registered today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->