ஜெகனுக்கு முட்டுக்கட்டை போட்டு தலைவலியை கொடுத்த சந்திரபாபு.! ஆந்திர அரசியலில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


ஆந்திராவுக்கு 3 தலைநகரங்களை உருவாக்கும் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்தார். ஆனால் ஜெகன் மோகனின் முடிவுக்கு மாநில சட்ட மேலவையில் தெலுங்கு தேசம் கட்சி முட்டுக் கட்டை போட்டுள்ளது.

ஆந்திரா மாநிலத்தின் நிர்வாகத் தலைநகராக விசாகப்பட்டினத்தையும், நிதி நிர்வாக தலைநகராக கர்நூலையும், தலைமைச் செயலக நகராக அமராவதியையும் உருவாக்க அந்த மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிமுடிவு செய்தார், அந்த திட்டத்திற்கான சட்ட மசோதா, ஆந்திர சட்டப்பேரவையில் சந்திரபாபு தலைமைலான தெலுங்கு தேசம் கட்சியின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் திங்கள் இரவு நிறைவேற்றப்பட்டது. 

இதையடுத்து இந்த திட்டம் ஆந்திர மாநில சட்ட மேலவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்ய கடும் எதிர்ப்பு தெரிவித்து, சட்ட மேலவையில் பெரும்பான்மையாக இருக்கும் தெலுங்கு தேச கட்சி உறுப்பினர்கள் நேற்று தீர்மானம் கொண்டு வந்தனர்.

எதிர்ப்பு மசோதாவுக்கு சட்ட மேலவை தலைவர் எம்.ஏ.ஷெரீஃப்  அனுமதி அளித்ததை கண்டித்து ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்களும் இதர ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளியை தொடர்ந்து சட்ட மேலவை ஐந்து முறை ஒத்திவைக்கப்பட்டது. 58 உறுப்பினர்களை கொண்ட ஆந்திர சட்ட மேலவையில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு  9 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது முதல் தான் நினைத்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வந்த ஜெகன்மோஹனுக்கு இந்த  3 தலைநகர் விவகாரம் சற்று தலைவலியை கொடுத்துள்ளது. சட்டசபையில் நடந்து வரும் இந்த அமளிகளால் ஆந்திர அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chandrababu gives headache to Jagan mohan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->