திருப்பூரில் 8 தீவிரவாதிகள் கைது... பாதுகாப்பை பற்றி துளியும் கவலை இல்லாத திமுக அரசு... மத்திய அமைச்சர் கடும் கண்டனம்..!
central minister l murugan dmk mk stalin
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள கண்டன செய்தியில், "திருப்பூரில் பயங்கரவாதச் சதித்திட்டம் தீட்டிய 8 தீவிரவாதிகள் கைது..! தமிழகத்தின் பாதுகாப்பை பற்றி துளியும் கவலை இல்லாத திமுக அரசுக்கு கடும் கண்டனம்..!
திருப்பூரில் பயங்கரவாதச் சதித்திட்டம் தீட்டிய 8 தீவிரவாதிகளை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
தீவிரவாதத் தாக்குதல் எனும் கொடூர உச்சத்திற்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பது தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய திமுக அரசு என்ன செய்தது? டெல்லி போலீசார் வந்து கைது செய்யும் வரை தமிழக போலிசார் என்ன செய்துகொண்டு இருந்தனர்?
தமிழகத்தில் தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மத்திய என்ஐஏ அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் தமிழக அரசு தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
கடந்த 2022ஆம் ஆண்டு, கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக பயங்கரவாத தாக்குதலை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து, பலரை கைது செய்து, தீவிரவாதத் தாக்குதல் என்பதை உறுதி செய்தது.
பல்வேறு வெடிபொருள்கள், ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு, 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் என அனைத்தும் அம்பலமானது.
ஆனால் குண்டுவெடிப்பு என்பதை ஏற்க மறுத்து சிலிண்டர் வெடிப்பு என்று இன்றளவும் தமிழக முதலமைச்சர் அவர்களும், திமுகவினரும் கூறி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கு மக்களின் பாதுகாப்பை பற்றி எந்த கவலையும் இல்லை.
பயங்கரவாதத்ததை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் நபர்கள், அமைப்புகளுக்கு மறைமுக ஆதரவு அளித்து வருகிறது.
வாக்குவங்கி அரசியலுக்காக மக்களின் பாதுகாப்பை காற்றில் பறக்கவிடும் போலி திராவிட மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுகவைப் போலவே, அவர்களது பங்காளிகளும் இதையே செய்கிறார்கள். கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்ய கோரி ஓயாது விஷம பிரசாரம் செய்து வருபவர்களும் திமுக கூட்டணி கட்சியினரே.
தமிழக மக்கள் அனைவருமே விழித்துக் கொள்ள வேண்டிய தருணமிது. பயங்கரவாத்திற்கு எதிராகவும், பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்களுக்கு எதிராகவும் கரம் கோர்த்து மக்கள் செயலாற்ற வேண்டும்.
அனைவரும் வேறுபாடு இல்லாமல் பயங்கரவாதத்துக்கு எதிராக விழிப்புணர்வுடன் ஒன்று சேர்ந்து செயலாற்ற வேண்டும்.
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சியினருக்கு தமிழக மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
central minister l murugan dmk mk stalin