இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்.. கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர். ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதால், இரண்டு கட்டங்களாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. முதல்கட்ட கூட்டத்தொடர் இன்று தொடங்கி பிப்ரவரி 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அடுத்த கட்ட கூட்டத்தொடர் மார்ச் 14-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாள் பாராளுமன்ற இரு சபைகளில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். 

இந்நிலையில், 2022-2023 ஆம் நிதியாண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய உள்ளார். 2வது முறையாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். நிதிநிலை அறிக்கையின் அம்சங்களை 'UnionBudget' என்ற செயலி மூலம் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், இந்த பட்ஜெட்டில் வாக்காளர்களை கவர்வதற்காக கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central govt budget 2020


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->