சரியாக செய்து முடித்த அதிமுக அரசு! மக்களுக்காக உதவி செய்வாரா ஸ்டாலின்!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இந்த வருடம் பருவ மழை பொய்த்து போனதால் தமிழகம் முழுவதுமே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதற்கிடையே விவசாயம் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் கர்நாடக நமக்கு வழங்க வேண்டிய நீரை பெறுவதற்கான காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்  இன்று டெல்லியில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணைய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு நதிநீர் பங்கீடு குறித்து விவாதித்தனர். அதன்படி ஜூன் மாதம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 9.19 டி.எம்.சி தண்ணீரையும் கர்நாடக சரியாக வழங்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு உறுப்பினர்களை அனுப்பி ஆணையத்தின் உத்தரவை பெற்றுள்ளது. 

ஆணையத்தின் உத்தரவு குறித்து விரைவில் முடிவெடுப்போம் என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், கர்நாடகாவில் எங்கள் தேவைக்கு போக மீதம் நீர் இருக்கும் பட்சத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். 

கர்நாடகாவில் திமுக கூட்டணி கட்சிகளின் ஆட்சி தான் நடக்கிறது. மக்களின் தேவை அறிந்து அவர்களிடம் ஸ்டாலின் வலியுறுத்துவரா? அல்லது வழக்கம் போல அறிக்கை விட்டு ஒதுங்கி கொள்வாரா என்பது திமுகவினருக்கே தெரியும். மேலும் கர்நாடகாவில் உள்ளவர்களும் திராவிட உறவுகள் என கொண்டாடும் திமுக, தமிழக உறவிகளுக்காக குரல் கொடுக்குமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.., 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cauvery water management board decision


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->