அதிமுக முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு ஜன.11ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.!! - Seithipunal
Seithipunal


வருமானத்திற்கு அதிகமாக 35.79 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக கடந்த 2021 ஆம் ஆண்டு அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்து ஒழிப்பு வழக்கில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது கடந்த முறை விசாரணை நடைபெற்ற போது நீதிபதி பூரண ஜெய் ஆனந்த் அவர்களிடம் விஜய் பாஸ்கரின் வழக்கறிஞர்கள் கூடுதல் ஆவணங்களை கேட்டிருந்தனர்.

அதன்படி லஞ்ச ஒழிப்பு துறையின் 17,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் அன்றே ஒப்படைத்தனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூரண ஜெய் ஆனந்த் முன்பு டாக்டர் விஜயபாஸ்கர் இன்று ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பூரண ஜெய் ஆனந்த் வரும் 11ம் தேதி நடைபெறும் என ஒத்திவைக்கப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Case against AIADMK exminister adjourned to Jan11


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->