வருடத்திற்கு இரண்டு கேஸ் சிலிண்டர்கள் இலவசம்; பெண்களுக்கு மாதம் ரூ. 3,000; கேரளாவில் பாஜக தேர்தல் அறிக்கை..!
BJPs election manifesto for Kerala
தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருக்கிறது. இதில், கேரளம் மாநிலத்தில் உள்ள 140 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 09ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
இந்நிலையில். கேரளம் மாநிலத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேப்போன்று அரசியல் கட்சிகள் தங்களில் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. அதன்படி, கேரளம் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க மும்முரமாக இருந்துவரும் பாஜக இன்று, அம்மாநிலத்திற்கான தனது தேர்தல் அறிக்கையை பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் கேரளம் வெளியிட்டுள்ளார்.
கேரளாவில் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள்:
ஏழை குடும்பங்களுக்கு வருடத்திற்கு இரண்டு கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். ஓனம் மற்றும் கிருஸ்துமஸ் ஆகிய பண்டிகை காலங்களில் இந்த சிலிண்டர்கள் வழங்கப்படும்.
தகுதியான பெண்களுக்கு ஆரோகிய சுரக்ஷா எனும் ரூ. 2,500 மதிப்புள்ள அட்டை வழங்கப்படும். இது மாதந்தோறும் ரீசார்ஜ் செய்யப்படும். இதனை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான மளிகை, மருந்துகளை வாங்கிக்கொள்ளலாம்.
கேரளாவில் எய்ம்ஸ் அமைக்கப்படும்.
தகுதியான பெண்கள், கைம்பெண்கள் மற்றும் 70 வயதுக்கு மேல் இருக்கும் முதிய பெண்களுக்கு மாதம் ரூ. 3,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.
கேரளாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும், ஒவ்வொரு மாதமும் 20,000 தண்ணீர் இலவசமாக வழங்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோயிலின் பாரம்பரியம் காக்க தனி சட்டம் உருவாக்கப்படும்.
திருவனந்தபுரம் – கன்னூர் பகுதிகளை இணைக்கும் வகையில் அதிவேக ரயில் சேவை உருவாக்கப்படும் என்பன முக்கிய வாக்குறுதிகளாக உள்ளன.
English Summary
BJPs election manifesto for Kerala