திமுகவின் மொழி அரசியலுக்கு முடிவுரை எழுதும் பாஜக! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இந்திய எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் 1967இல் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது திராவிட முன்னேற்ற கழகம். தேசிய கட்சிகளுக்கு மாநிலக் கட்சிகளின் இந்தி மொழி அரசியல் பெரும் சவாலாக இருந்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற தென் மாநிலங்களிலும் மேற்குவங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களிலும் பாஜக காலூன்ற மொழி அரசியல் பெரும் சவாலாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் திமுக மீண்டும் தனது இந்தி மொழி திணிப்பு போராட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதனால் பாஜக கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த நெருக்கடியை முறியடிக்கும் விதமாக பாஜக பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்நுட்ப படிப்புகளை இந்திய மொழிகளில் துவங்க பாஜக முடிவு செய்துள்ளது. மத்தியபிரதேசத்தில் இந்தி மொழியில் மருத்துவப் படிப்பை துவங்க பாடப்புத்தகங்களை வெளியிட்டது பாஜக. புதுச்சேரியில் தமிழ் வழியில் மருத்துவ படிப்பு துவங்க படும் எனவும் அதற்கான புத்தகம் அச்சிடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்து இருந்தார். 

இதேபோன்று மாநிலங்களான தெலுங்கு, மலையாளம் உட்பட இந்திய மொழிகளில் மருத்துவ படிப்பு துவங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநில மொழிகளுக்கு எதிரான கட்சி பாஜக என எதிர்கட்சிகள் மேற்கொண்டு வரும் பிரச்சாரத்தை முறியடிக்கவே இந்த திட்டத்தை செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மொழியை வைத்து அரசியல் நடத்தும் திமுக தமிழை வளர்க்காமல் ஆங்கிலத்தை வளர்கிறது என விமர்சித்திருந்தார். 

இந்தியில் மட்டும் மருத்துவ படிப்பை ஹிந்தியில் மட்டும் கொண்டு வந்து மத்திய பாஜக அரசு இந்திய திணிக்கிறது என திமுக குற்றச்சாட்டு முன்வைத்தது. ஆனால் தற்பொழுது தமிழ் உட்பட மாநில மொழிகளில் மருத்துவ படிப்பை கொண்டு வரப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதால் திமுகவால் எந்த கருத்தும் சொல்ல முடியாத நிலையில் உள்ளது. மொழியை வைத்து அரசியல் செய்த திமுகவிற்கு முடிவுரை எழுதவே இந்த திட்டத்தினை மத்திய அரசு கையில் எடுத்துள்ளதாக தெரிய வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP will write an end to DMKs language politics


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->