#தமிழகம் || ஆஜராக தவறினால் கைது நடவடிக்கை., பாஜக பிரமுகருக்கு சம்மன் அனுப்பிய போலீஸ்.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்து பரப்பியதாக, பாஜக மாநில தலைவர் நிர்மல் குமார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.  

மேலும், வரும் 8ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

சமூகவலைதளத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாக, பொங்கல் தொகுப்பு குறித்து பொய்யான ஒரு பதிவை பாஜக ஐடி பிரிவு பரப்பியதாக புகார் எழுந்தது.  

இதுகுறித்து பாஜக ஐடி பிரிவு மாநில செயலாளர் நிர்மல் குமார் மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பியுள்ளது.

ஏப்ரல் 8ம் தேதி, காலை 11 மணிக்கு சென்னை வேப்பரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் அமைந்துள்ள கிரைம் பிராஞ்ச் அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும், தவறினால் கைது நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp TN ITwing nirmal kumar case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->