திமுகவில் இணைவது கேன்சல்... வானதி கணவர் சீனிவாசனுக்கு தேசிய வி.எச்.பியில் புதிய பதவி..!! - Seithipunal
Seithipunal


கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏவான வானதி சீனிவாசன் திமுகவில் இணைய போவதாக சமூக வலைதளங்களில் நேற்று பரவலாக பேசப்பட்டது. இதற்கு காரணம் தமிழக பாஜகவில் வானதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும், கடந்த 15 வருடங்களாக வட தமிழக வி.எச்.பி தலைவராக இருந்த வானதியின் கணவர் சீனிவாசனின் பதவி கடந்த வாரம் பறிக்கப்பட்டதும் காரணமாக சொல்லப்பட்டது. வானதி சீனிவாசன் திமுகவில் இணைந்தால் அதற்குக் காரணம் அண்ணாமலை தான் என்று பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டியிருந்தார். 

டாக்டர் சீனிவாசன் கடந்த 20 வருடங்களாக வி.எஸ்.பி அமைப்பில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்தார். இந்த நிலையில் வட தமிழாக வி.எச்.பி தலைவராக இருந்து வந்த வானதியின் கணவர் சீனிவாசனுக்கு தற்பொழுது அகில இந்திய வி.எச்.பி வழக்கறிஞர் பிரிவு இணை அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வி எஸ் பி யின் தலைவராக வாஸ்து நிபுணர் ஆண்டாள் சொக்கலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் வானதி சீனிவாசன் திமுகவில் இணைய போவதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP MLA Vanathi husband Srinivasan gets new post in National VHP


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->