அறப்போர் இயக்கம் வைத்த ஆப்பு.! பாஜக நிர்வாகியின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் மகன் பாலாஜி ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி இருந்தது. குறிப்பாக அந்த குற்றச்சாட்டில் சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் சுமார் 1.3 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை மோசடியாக ராதாபுரத்தில் பாலாஜி பத்திரப்பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை பாஜக சட்டமன்ற உறுப்பினர் நைனா நாகேந்திரன் மகன் பாலாஜி முறைகேடாக பத்திர பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பத்திரப்பதிவை ரத்து செய்து ராதாபுரம் மண்டல துணை பத்திரப்பதிவு துறை தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக மாநில பாஜக இளைஞர் அணி துணைத்தலைவாராக பாலாஜி இயங்கி வரும் நிலையில் அவர் மோசடி செய்தது உறுதியானதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP MLA son Rs100 crore worth deed registration canceled


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->