அதிமுக ஆட்சியில் இருந்தது பாஜகவால் தான்.. ஜெயகுமாரை பங்கம் செய்த பாஜக தரப்பு.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொது தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அதிமுக தொகுதி பங்கிட்டு குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் ஆன எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் அதிமுக தொகுதி பங்கிட்டு குழுவுடன் தேர்தல் பிரச்சார குழுவும் கலந்து கொண்டதால் சில முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பின்போது மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக மாநில நலனுக்கு எதிராக பாஜக என்னவெல்லாம் செய்தது என்பதை நாங்கள் அம்பலப்படுத்துவோம்" என பகிரங்கமாக தெரிவித்து இருந்தார்.

இதனை மேற்கோர் காட்டி தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தமது சமூக வலைதள பக்கத்தில் "என்ன!! தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தது பாஜகவால் தான் என்று சொல்லப்போகிறீர்களா?" என கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார். இதனை பாஜக தரப்பினர் கொண்டாடியும், அதிமுக தரப்பினர் எதிர்த்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP leader response to Aiadmk jayakumar criticism


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->