இவரு வந்தா கட்சி குட்டிச்சுவரா ஆகிடும்.. ரஜினியை சாடிய பாஜக மூத்த தலைவர்..! அதிர்ச்சியில் தொண்டர்கள்..! - Seithipunal
Seithipunal


ஜினிகாந்த் நடிப்பையும் தண்டி தற்போது அரசியலுக்கு வருவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறார். அந்த வகையில், அரசியல் பிரவேசம் வரும் 2020 ஆம் ஆண்டு நிகழும் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள். ஒருபக்கம் ரஜினி அரசியலுக்கு வருவதற்கு அரசியல் கட்சிகள்  சில எதிர்ப்பு கூறி வந்தாலும் பாஜக போன்ற தேசிய கட்சி அவருக்கு ஆதரவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம். காரணம் மோடி  அரசு குறித்த எந்தவொரு எதிரான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

மேலும், அப்படி ஏதேனும் சொன்னாலும் சில மணிநேரத்திலே அதற்கான விளக்கத்தையும் அளிப்பார். இதன் காரணமாக ரஜினிக்கு பலரும் காவி சாயம் பூசியே அழகுபார்க்கிறார்கள். இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  தரிசனம் செய்வதற்காக பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வந்திருந்தார். 

அதன் பின், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது. அப்படி வந்தால் அவர்கள் தொண்டர்களாகத் தான் வர வேண்டும். அதை விடுத்து தலைமை பொறுப்புக்கு வர நினைக்கக் கூடாது என்று தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து அவர், எதிர்காலத்தில்  தமிழகத்தில் பாஜகவை ஆதரித்து ரஜினி களமிறங்கினால், அந்த கட்சி மேலும் குட்டிச்சுவராகத்தான் போகும் என்று கூறி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp elder leader about rajinikanth


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->