பாஜகவின் சக்கர வியூகம்.. இந்தியாவவையே 3ஆக பிரிக்க முடிவு.!! ஜூலை 8ல் முக்கிய ஆலோசனை.!! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து பாஜக தலைமையில் ஜூலை 8ம் தேதி ஆலோசனை.!!

எதிர்வரும் 2024 நாடாளுமன்ற பொது தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைத்து 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி நாடு முழுவதும் பாஜக சார்பில் பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாஜக மூன்றாவது முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற சக்கர வியூகத்தை வகுத்துள்ளது. அதன்படி இந்தியாவை வடக்கு, தெற்கு, கிழக்கு என 3 மண்டலனாக பிரித்து அதன் அடிப்படையில் தேர்தல் வியூகம் மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றை குறித்து விவாதிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடத்த பாஜக முடிவு செய்துள்ளது.

அதன்படி வரும் ஜூலை 6, 7, 8 ஆகிய தேதிகளில் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூலை 6ம் தேதி கவுகாத்தியிலும், ஜூலை 7ம் தேதி டெல்லியிலும், ஜூலை 8ம் தேதி தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.

இது ஆலோசனைக் கூட்டமானது பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா தலைமையில் பாஜக மாநில தலைவர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், பாஜக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அமைப்புச் செயலர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும்.  எந்தெந்த மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுடன் எவ்வளவு தொகுதிகளை கேட்டு பெற வேண்டும். ஏற்கனவே உள்ள கூட்டணி கட்சிகளின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த கூட்டத்தின் முடிவில் பாஜகவின் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்தான இறுதி கட்ட முடிவு எடுக்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான வாக்குறுதி, பிரச்சார வியூகம் ஆகியவை குறித்து விரிவான ஆலோசனை நடத்தி இறுதி கட்ட முடிவு எடுக்க உள்ளதாக என பாஜக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP consultative meeting on July8 for parliament election


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->