குடியுரிமை திருத்தச் சட்டம் விவகாரத்தில் பாஜக அதிரடி..!  - Seithipunal
Seithipunal


நாடுமுழுவதும் குடியுரிமை சட்டத்தை பற்றிய பேச்சுதான் இருக்கிறது. அதில் ஒரு பக்கம் ஆதரவு தெரிவித்து போராடுகிறார்கள், மறுபக்கம் அதை எதிர்த்து போராடுகிறார்கள். 

அந்த வகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக, இல்லங்கள் தோறும் சென்று, விழிப்புணர்வை ஏற்படுத்தும் பரப்புரை இயக்கத்தை, பாஜக முன்னெடுத்து வைத்திருக்கிறது. 

இதை தொடர்ந்து, டெல்லி லஜ்பத் நகர் பகுதியில், வீடு, வீடாகச் சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, துண்டு பிரசுரங்கள் வழங்கினார். மேலும், டெல்லி அமர் காலனி பகுதியில் வசிக்கும் ஆப்கானிஸ்தான் சீக்கிய அகதிகளை சந்தித்து அமித் ஷா பேசினார். பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா, உத்திரப்பிரதேசத்தின், காசியாபாத் நகரில் விழிப்புணர்வு பரப்புரையில் ஈடுபட்டார்.

மேலும், டெல்லியில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், விழிப்புணர்வு இயக்கத்தின் ஒருபகுதியாக, பாகிஸ்தானில் இருந்து அகதியாக வந்துள்ள இந்து குடும்பம் ஒன்றை சந்தித்துப் பேசினார். பெங்களூருவில், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா விழிப்புணர்வு பரப்புரையில் ஈடுபட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp awareness about caa


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->