பாஜக வேட்பாளர்கள் பட்டியல்.. திடீர் பல்டி அடித்த பாஜக.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக தலைமையில் ஒரு அணியும், திமுக தலைமையில் மற்றொரு அணி அமைவது உறுதியாகிவிட்டது. மேலும் மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதனிடையே, அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டது. அதிமுகவிடம் பாஜக 38 தொகுதிகளை கேட்டு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் பாஜக போட்டியிட விரும்பும் 38 தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியானது. 

இந்நிலையில், இதுகுறித்து தூத்துக்குடியில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, பாஜக வேட்பாளர் என ஊடகங்களில் வெளியான அந்தப் பட்டியல், பாஜக சார்பில் தயார் செய்ததில்லை. கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த யாரோ ஒருவர் வெளியிட்ட பட்டியல் தான் அது. பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. 

பாஜக மேலிடம் முடிவு செய்தால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடுவேன். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை சம்பவத்தில் தவறு செய்தவர்கள் கட்சி வேறுபாடின்றி தண்டிக்கப்படவேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என அண்ணாமலை  தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp annamalai press meet on jan 06


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->