பாஜக தொண்டர்களை முடக்க முடியாது..  மாநில செயலாளர் கைதுக்கு - பாஜக அண்ணாமலை கண்டனம்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு பாஜகவின் மாநில செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி.சூர்யா. இவர் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் நெருக்கமாக இருப்பவர். மேலும் இவர் அண்ணாமலையுடன் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் கூட மேற்கொண்டுள்ளார்.

சென்னையை சேர்ந்தவரான இவரை மதுரை மாநகர போலீசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். இதனையடுத்து எஸ் ஜே சூர்யா கைது செய்யப்பட்டதற்கு பாஜக ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் "தமிழக பாஜக மாநிலச் செயலாளர் திரு எஸ்.ஜி.சூர்யா அவர்கள் நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. சமூகப் பிரச்சினைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் இரட்டை வேட நிலைப்பாட்டினை விமர்சித்ததற்காகக் கைது செய்திருக்கிறார்கள்.


விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ளத் திறனற்ற திமுக, எதிர்க்கருத்துக்கள் கூறுபவர்களைக் கைது செய்து, அவர்கள் குரலை முடக்கப் பார்க்கிறது. அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை எல்லாம் கைது செய்யும் ஜனநாயக விரோதப் போக்கு தமிழகத்தில் நிலவுகிறது.

கருத்துச் சுதந்திரத்தின் காவலர்கள் போல் தங்களைக் காட்டிக் கொண்டு, எதிர்க் குரல்களை எல்லாம் நசுக்க நினைக்கும் முயற்சி நீண்ட நாளைக்குச் செல்லாது என்பதை அறிவாலய அரசு நினைவில் கொள்ள வேண்டும். விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் இது போல தொடர்ந்து பாஜக தொண்டர்களைக் கைது செய்வது எதேச்சதிகாரப் போக்கு.

பாஜக தொண்டர்களை, இது போன்ற அடக்குமுறைகளால் முடக்கி விட முடியாது. எங்கள் குரல், மக்களுக்காக எப்போதும் துணிச்சலாக ஒலித்துக்கொண்டிருக்கும்." என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP annamalai condemnation to TN govt arrested SG Surya


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->