"திராவிடம்" என்ற கலப்படம்... அண்ணா சொன்னது போல்.. தமிழக பாஜகவின் பரபரப்பு அறிக்கை ..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆளுநர் ஆர்.என் ரவி கூறிய 'தமிழகம்' என்ற வார்த்தையால் திமுக மற்றும் பாஜக இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் ராமர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி 'தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்பதுதான் பொருத்தமானது' என பேசினார். "தமிழ்நாடு'' என்ற வார்த்தை தமிழ் இலக்கியங்களில் எங்கும் இல்லை.

தொல்காப்பியத்தில் கூட தமிழகத்தின் வட எல்லையாக இமயமலை தென் எல்லையாக கடல் சொல்லப்பட்டுள்ளது. மகாகவி பாரதியார் தான் முதன்முதலாக தமிழ்நாடு என குறிப்பிட்டார்; அதற்கு முன் இந்த வார்த்தை எங்கும் இல்லை. கடந்த 1950 முன் தமிழகம் சென்னை மாகாணம் என அழைக்கப்பட்டது. தமிழ்நாடு என்பதே அண்மைக்கால கருத்து தான். 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய முன்னாள் முதல்வர் அண்ணாதுரை 'ஏ...தாழ்ந்த தமிழகமே' என பேசியுள்ளார். அதே தலைப்பில் அண்ணாதுரையின் சொற்பொழிவு புத்தகமாகவும் வெளிவந்துள்ளது. கருணாநிதி பேசும்பொழுது ஆயிரம் இடங்களில் தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார். அப்பொழுதெல்லாம் வராத கோபம் ஆளுநர் சொல்லும் பொழுது மட்டும் ஏன் வருகிறது..??

தமிழக ஆளுநர் என்ன பேசினாலும் எதிர்க்க வேண்டும் என்ற மனநிலையை திமுக வழக்கமாகக் கொண்டுள்ளது. தமிழக ஆளுநர் சட்டமன்றத்தில் பேசும் பொழுது நிறைவாக "ஜெய்ஹிந்த்.. ஜெய் தமிழ்நாடு.." என சொல்லி புதிய மரபை தோற்றுவித்தார். தமிழ்நாடு என்ற கருத்தை உருவாக்கியவர்கள், தமிழுக்கென்று ஒரு மாநிலத்தை உருவாக்கியவர்கள், தமிழகம் என்றும் அழைக்கலாம் என புரிய வைத்தவர்கள் தேசியவாதிகள் தான். "திராவிடம்" என்ற தேவையற்ற இனவாதத்தை திமுக கலப்படம் செய்கிறது" என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP alleges that Dravidian is adulteration


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->