I.N.D.I.A கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? - பீகார் முதல்வர் நிதீஷ்குமார் விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார். 

இவர் சமீபத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜக ஆதரவுடன் மீண்டும் ஒன்பதாவது முறையாக பிகார் மாநில முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்த விவகாரம் தேசிய அரசியலில் பெரும் புயலை கிளப்பிய நிலையில் கூட்டணியில் இருந்து வெளியேறுவது ஏன் என்பது குறித்து பீகாரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் விளக்கம் அளித்துள்ளார். 

பீகாரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நிதீஷ் குமார் "கூட்டணிக்கு வேறு பெயரை தேர்வு செய்ய வேண்டும் என நான் வலியுறுத்தினேன் ஆனால் அதை அவர்கள் ஏற்கவில்லை கூட்டணிக்காக நான் கடுமையாக முயற்சித்தேன். ஆனால் அவர்கள் ஒரு விஷயம் கூட செய்யவில்லை.

இன்று வரை எந்த கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை முடிவு செய்யவில்லை. அதனால்தான் இந்தியா கூட்டணியை விட்டுவிட்டு முதலில் எங்கு இருந்தேனோ அங்கேயே திரும்பி வந்து விட்டேன். 

பீகாரில் சாதிவாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தன்னால்தான் நடந்தது என்று ராகுல் காந்தியால் எப்படி கூற முடியும்? சாதி வாரி கணக்கெடுப்பு எப்போது நடந்தது என்பதை ராகுல் காந்தி மறந்துவிட்டாரா? என விளக்கம் அளித்ததோடு ராகுல் காந்தியை விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bihar CM Nitishkumar explain why leaved from India alliance


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->